கருணைக் கொலைக்கு இந்தியாவில் அனுமதி – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கருணைக் கொலைக்கு இந்தியாவில் அனுமதி – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
கருணைக் கொலைக்கு இந்தியாவில் அனுமதி – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
கருணைக் கொலை தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது. இத்தீர்ப்பில் மீள முடியாத நோயுடையவர்களை கருணைக் கொலை செய்ய அனுமதிக்கலாம் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் மருத்துவ சிகிச்சையால் குணம் பெற முடியாதவர்களை உயிர்காக்கும் கருவிகளை அகற்றி உயிரிழக்கச் செய்யலாம் என்று கூறிய நீதிபதிகள் எப்படி மனிதன் கண்ணியமாக வாழ உரிமை இருக்கிறதோ அப்படி கண்ணியமான முறையில் இறப்பதற்கும் உரிமையுண்டு என்று கூறியுள்ளனர்.

கருணைக் கொலை தொடர்பான இந்த தீர்ப்பில் கருணைக் கொலை செய்வதற்கான வழிமுறைகளையும் வகுத்து உத்தரவிட்டுள்ளனர். கருணைக் கொலை தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வரும் நிலையில் கருணைக் கொலைக்கு அனுமதி அளித்து இன்று தீர்ப்பளித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது
TAG
Author Avatar

Author: Kiruththigan verified_user

CEO, @YarlInternet, the digital repository of The Yarl Media Group. Journalist | Member of the Editorial Board at @YarlThinakkural | @YarlVoice | @YarlExpressNews | Instagram : kirusayz | Twitter : kirusayz facebooktwitterwhatsapplinkedininstagram