![]() |
| சவுதியில் முதன்முறையாக பெண்களுக்கான மாரத்தான் ஓட்டம் |
சவுதி அரேபியாவில் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் பதவியேற்ற பின் பெண்களுக்கு ஆதரவாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி கடுமையான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.
"முன்னதாக 2015- ல் அங்கு பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டது. மேலும் வாகனம் ஓட்டவும் , குடும்பத்தினர் அனுமதி இல்லாமல் உயர்கல்வி பயிலவும் தனியாக தொழில் தொடங்கவும் பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டன."
இந்நிலையில், பெண்கள் மட்டுமே பங்கேற்ற முதல் மாரத்தான் போட்டி நடைப்பெற்றது. அதில் பர்தா அணிந்தபடி, முகம், உடல் முழுவதும் மறைத்தபடி 3 கி.மீ. தொலைவுக்கு 1500க்கும் மேற்பட்ட பெண்கள் ஓடினர்.
இந்த மாரத்தானில் மிஸ்னா அல் நாசர் என்பவர் வெற்றி பெற்றார். இவருக்கு பரிசு பொருட்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன
