புதிய வரி சட்டத்திற்கு எதிராக தேசிய எதிர்ப்பு நாள்





புதிய வரி சட்டத்திற்கு எதிராக தேசிய எதிர்ப்பு நாள் ஒன்றை அறிவிப்பதற்கு கூட்டு எதிர்கட்சி தீர்மானம் எடுத்து ள்ளதாக தெரியவருகின்றது.

புதிய வரி சட்டத்தின் ஊடாக மிக அநீதியான முறையில் வரி அறவீடு செய்யப்படுகின்றது. ஒரு லட்சம் ரூபாய்க் கு அதிகமாக தனிநபர் வருமானம் பெற்றால் வரி அறவீடு செய்யப்படுகின்றது.

இதேபோல் காணி விற்பனை மற்றும் வங்கி வைக்புக்களுக்கும் வரி அறவீடு செய்யப்படுகின்றது. இந்தவகையில் குறித்த வரியை இரத்து செய்யும்படி ஜனாதிபதியை கோரவுள்ளோம்.

மேலும் இந்த புதிய வரி சட்டத்திற்கு எதிராக தேசிய எதிர்ப்பு நாள் ஒன்றை அறிவிக்கவுள்ளோம். இது பிரதமருக் கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு பின்னர் அறிவிக்கப்படும்.

என கூட்டு எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயக்கொடி கூறியுள்ளார்.

TAG